ஆட்டு எலும்பு சூப்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ஆட்டு எலும்பு - 1/4 கிலோ

வெங்காயம் - 2

மஞ்சள்பொடி - 1 தேக்கரண்டி

மிளகு - 1 தேக்கரண்டி

கிராம்பு - 6

பட்டை - 2 துண்டுகள்

கறிவேப்பிலை - சிறிது

எண்ணெய் - 1 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

ஆட்டு எலும்பினை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். பிறகு அதனை ஒரு பாத்திரத்தில் இட்டு அரை லிட்டர் அளவிற்கு தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.

நறுக்கிய வெங்காயம், உடைத்த மிளகு, மஞ்சள்பொடி ஆகியவற்றையும் அந்த தண்ணீரில் போட்டு கொதிக்கவிடவும்.

தண்ணீர் நன்கு கொதித்தவுடன், எலும்பில் உள்ள சாறு நீரில் இறங்கி எண்ணெய் போல் மிதக்கும். இந்த நேரத்தில் பாத்திரத்தை இறக்கிவிட்டு, ஒரு வாணலியை வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காயவிடவும்.

எண்ணெய் காய்ந்ததும் பட்டை, கிராம்பு ஆகியவற்றை தட்டிப் போடவும். அவை சிவந்து வந்தவுடன் கறிவேப்பிலையை அதில் போட்டுத் தாளிக்கவும்.

பிறகு எலும்பு நீரை அதில் ஊற்றி, தேவையான அளவு உப்பையும் சேர்த்து கிளறி சிறிது நேரம் மூடி வைத்துவிட வேண்டும்.

சற்று கொதித்தவுடன் இறக்கி சூடாய் சூப் பவுலில் பரிமாறவும்.

குறிப்புகள்: