வாழைப்பழ ரவை தோசை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வாழைப்பழம் (நன்கு கனிந்தது) - 2

ரவை - 1 1/4 கப்

மா (மைதா அல்லது கோதுமை) - 1/4 கப்

சீனி - 4 மேசைக்கரண்டி

நெய் - சிறிது

உப்பு - 2 சிட்டிகை

செய்முறை:

ரவையினுள் தண்னீர் ஊற்றி 10 - 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

பின்னர் அதனுள் வாழப்பழத்தை சேர்த்து பிசைந்து மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.

பின்னர் அதனுள் சீனி, உப்பு, மா சேர்த்து கட்டியில்லாமல் கரைத்து 30 - 45 நிமிடங்கள் வைக்கவும்.

பின்னர் தோசைக்கல்லில் தோசைகளாக வார்த்து திருப்பி போட்டு நெய் சிறிது ஊற்றி முறுக சுட்டு எடுக்கவும்.

குறிப்புகள்:

குழம்பு, சம்பலுடன் சாப்பிடலாம். சுவையாக இருக்கும்.