ராகி மாவு தோசை

on on on on off 2 - Great!
4 நட்சத்திரங்கள் - 2 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

ராகிமாவு - 1 கப்

உளுந்துமாவு - 1 குழிகரண்டி

சின்ன வெங்காயம் - 5

பச்சைமிளகாய் - 1

கறிவேப்பிலை -1 கொத்து

இஞ்சி -1 சிறு துண்டு

கொத்தமல்லிதழை - சிறிது

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

இட்லிக்கு உளுந்துமாவு அரைக்கும்பொழுது 1 கரண்டி மாவு எடுத்துவைக்கவும்.

ராகிமாவு, உளுந்துமாவு,உப்பு போட்டு தேவையான தண்ணீர் ஊற்றி தோசைமாவு பதம் கரைத்து வைக்கவும், 4 (அ) 5 மணி நேரம் ஊற வைக்கவும்.

மாவில் அறிந்த வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லிதழை போட்டு கலந்து தோசையாக சுடவும்.

குறிப்புகள்: