ரவா தோசை (5)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பாம்பே ரவா - 1/2 கிலோ

பச்சரிசி - 1/2 கிலோ

இஞ்சி - சிறு துண்டு

பச்சை மிளகாய் - 2

கறிவேப்பிலை - சிறிது

பெருங்காயம் - சிறிது

சீரகம் - 1 தேக்கரண்டி

கடுகு - 1/2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பாம்பே ரவையையும் பச்சரிசியையும் கலந்து மிஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொள்ளவும். இரண்டு மாதங்கள் வரை இதனை வைத்திருக்கலாம். தேவையான போது, மாவை எடுத்து நீரில் கரைத்து தோசை சுட்டுக் கொள்ளலாம்.

தோசை வார்ப்பதற்கு ஒரு மணி அல்லது இரண்டு மணி நேரத்திற்கு முன்பே மாவை கரைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு கப் மாவிற்கு இரண்டரை கப் தண்ணீர் என்ற விகிதத்தில் கலந்து கொள்ளவும்.

மாவுடன் பொடியாக நறுக்கின இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயம், சீரகம், தேவையான உப்பு ஆகியவற்றைச் சேர்த்து கலக்கிக் கொள்ளவும்.

சிறிது கடுகையும் தாளித்து சேர்த்துக் கொள்ளலாம்.

ரவா தோசைக்கு தோசை கல் சற்று பெரியதாக இருப்பின் நல்லது. கல் நன்றாக காய வேண்டும்.

கரண்டியால் எடுத்து வார்ப்பதை விட, ஒரு கிண்ணம் அல்லது டவரா கொண்டு சுழற்றி விடவும்.

நன்றாக வெந்த பிறகு திருப்பிப் போடவும்.

வெங்காயம் சேர்த்து செய்ய வேண்டும் என்றால், சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொண்டு கல் நன்றாகக் காய்ந்ததும் கையால் கல்லில் பரத்தித் தூவி விட்டு அதன் மேல் தோசையை வார்க்கவும்.

வெங்காயம் உதிர்ந்து விழாமல் தோசையில் நன்றாக ஒட்டிக் கொள்ளும்.

குறிப்புகள்:

ஒரு கப் மாவிற்கு இரண்டரை கப் தண்ணீர் என்ற விகிதத்தில் கலந்து கொள்ளவும்.