ரவா இட்லி (5)

on on on off off 3 - Good!
3 நட்சத்திரங்கள் - 3 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

ரவை - 1/2 கிலோ

புளித்த தயிர் - 1/2 லிட்டர்

கடலைப்பருப்பு - 1 மேசைக்கரண்டி

முந்திரி - 10

இஞ்சி - 1/2 அங்குல துண்டு

கடுகு -1/2 தேக்கரண்டி

ஈனோ சால்ட் அல்லது சமையல் சோடா - 1 தேக்கரண்டி

பச்சை மிளகாய் - 3

கறிவேப்பிலை - ஒரு கொத்து

கொத்தமல்லி - சிறிது

எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு, கடலைப்பருப்பு, பொடியாக நறுக்கிய முந்திரி, இஞ்சி, பச்சைமிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து வதக்கி, அத்துடன் ரவையையும் சேர்த்து ரவை சூடாகும் வரை வறுக்கவும்.

ரவை ஆறியதும், தயிர், உப்பு, ஈனோ சால்ட் அல்லது சமையல் சோடா சேர்த்து கலக்கி 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.

பிறகு இட்லி தட்டில் எண்ணெய் தடவி இட்லிகளாக ஊற்றி வேக விட்டு எடுக்கவும்.

சூடாக தக்காளி சட்னி, கலவை சட்னியுடன் நன்றாக இருக்கும்.

குறிப்புகள்: