ரவா இட்லி (3)

on on on on off 1 - Great!
4 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

ரவை - 4 கப்

மோர் - 1 1/2 கப்

தண்ணீர் - 1/2 கப்

கடுகு, உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி

கடலை பருப்பு - 1 தேக்கரண்டி

பச்சை மிளகாய் - 2 என்னம் (பொடிதாக நறுக்கியது)

கறிவேப்பிலை - 1 இனுக்கு (பொடிதாக நறுக்கியது)

எண்ணைய் - 2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வாணலியில் எண்ணைய் ஊற்றி கடுகு,உளுத்தம்பருப்பு தாளித்து கடலை பருப்பு போட்டு இதனுடன் பச்சைமிளகாய், கறிவேப்பிலை போட்டு ரவை சேர்த்து வறுக்கவும். இதனுடன் உப்பு சேர்த்து வைக்கவும்.

அடுப்பை அணைத்து விட்டு மோர் சேர்த்து தண்ணீர் விட்டு பிசைந்து ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். ரவா இட்லி செய்ய மாவு இட்லி மாவு பதத்திற்கு இருக்க வேண்டும்.

பின் இட்லி தட்டில் ஊற்றி இட்லியாக வார்த்தெடுக்கவும். சுவையான ரவா இட்லி ரெடி.

குறிப்புகள்: