ரவா இட்லி (1)

on on on off off 3 - Good!
3 நட்சத்திரங்கள் - 3 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

ரவை - 400 கிராம்

தயிர் - 2 கப்

உளுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி

கடலைப்பருப்பு - 1/2 தேக்கரண்டி

கடுகு - 1/4 தேக்கரண்டி

உடைத்த முந்திரிபருப்பு - 10

கொத்தமல்லி - 1/4 கட்டு

பச்சைமிளகாய் - 1

நெய் - 2 தேக்கரண்டி

உப்பு - 1/2 தேக்கரண்டி

செய்முறை:

ரவையை இலேசாக வறுத்து 2 கப் தயிரில் ஊற வைக்க வேண்டும்.

பிறகு ஒரு மணி நேரம் ஊறியதும் நெய்யில் உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, கடுகு, முந்திரிபருப்பு மேற்கூறிய அளவு படி தாளித்து ஊறிய ரவை மாவில் போடவும்.

கொத்தமல்லி தழையை நன்றாக பொடியாக நறுக்கி போடவும். அத்துடன் உப்பையும் போட்டு கிளறி இட்லி தட்டில் சாதாரண இட்லி ஊற்றுவது போல் கரைத்து இட்லி போல் ஊற்றவும்.

பத்து நிமிடம் கழித்து, வெந்ததும் எடுத்து தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.

குறிப்புகள்: