முள்ளு முருங்கைகீரை அடை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

முள்ளு முருங்கைக்கீரை - ஒரு கட்டு

அரிசி - 2 ஆழாக்கு

பச்சரிசி - 2 ஆழாக்கு

கடலைப்பருப்பு - ஒரு ஆழாக்கு

துவரம்பருப்பு - அரை ஆழாக்கு

உளுத்தம்பருப்பு - அரை ஆழாக்கு

வரமிளகாய் - 10

சோம்பு - ஒரு தேக்கரண்டி

தேங்காய் - ஒரு மூடி

வெங்காயம் - 2

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

கடுகு, உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி

செய்முறை:

அரிசி, பருப்புகள் எல்லாவற்றையும் ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.

கீரையை சுத்தம் செய்து ஆய்ந்து அலசி வைத்து கொள்ளவும்.

மிளகாய், சோம்புடன் ஊறவைத்த அரிசி, பருப்பு, கீரை ஆகியவற்றை உப்பு சேர்த்து கொரகொரவென்று அரைக்கவும்.

ஒரு கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும்.

தேங்காயை துருவி போட்டு வதக்கி அரைத்த மாவில் கொட்டி கலக்கவும்.

தோசைக்கல்லை காயவைத்து அடையாக ஊற்றி சுற்றிலும் எண்ணெய் விட்டு வெந்தவுடன் திருப்பி வேகவைத்து எடுக்கவும். சுவையான அடை தயார்.

குறிப்புகள்: