மால்வனி பூரி

on on on off off 2 - Good!
3 நட்சத்திரங்கள் - 2 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

உளுந்து - 1/2 கப்

அரிசி மாவு - தேவையான அளவு

எண்ணை - பூரி பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

உளுந்தை ஊறவைத்து குறைந்த அளவு தண்ணீர் விட்டு வடை மாவு போல அரைத்து வைக்கவும்.

இதனுடன் உப்பு மற்றும் அரிசி மாவு கலந்து பூரி மாவு பதத்திற்கு பிசைந்து வைக்கவும்.

ஈரமான துணி போட்டு முப்பது நிமிடம் மூடி வைக்கவும்.

பிறகு மொத்தமான பூரியாக தேய்த்து எண்ணையில் பொரித்தெடுக்கவும்.

குறிப்புகள்:

மால்வானி சிக்கன் அல்லது சோயா கிரேவி அருமையாக இருக்கும்.