மசாலா சீஸ் பூரி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு - 3/4 கப்

மைதா மாவு - 3/4 கப்

உருளைகிழங்கு - 2

வெங்காயம் - 2

பச்சைமிளகாய் - 3

எழுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி

மசாலா தூள் - 1/4 தேக்கரண்டி

சீஸ் - ஒரு துண்டு

கரம் மசாலா - 2 தேக்கரண்டி

இஞ்சி - ஒரு துண்டு

நெய் - 1 தேக்கரண்டி

எண்ணை - பூரி பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் உருளைகிழங்கை வேகவைத்து தோலை நீக்கி நன்கு மசித்துக்கொள்ளவும்.

வெங்காயத்தை துருவிக்கொள்ளவும்.

இஞ்சியையும், பச்சைமிளகாயையும் அரைத்துக்கொள்ளவும்.

சீஸை துருவிக்கொள்ளவும்.

பின் அடுப்பில் சட்டியைவைத்து நெய் ஊற்றி வெங்காயம் போட்டு வதக்கி,அரைத்ததை போட்டு வதக்கி இறக்கவும்.

பின் ஒரு பாத்திரத்தில் மாவை போட்டு அத்துடன் மசித்த உருளைகிழங்கு, துருவிய சீஸ் வதக்கிய வெங்காயம்,உப்பு இவற்றை சேர்த்து கலக்கி சிறிது தண்ணீர் ஊற்றி மிருதுவாக பிசைந்துக்கொள்ளவும்.

பின் பிசைந்த மாவில் இருந்து சிறு உருண்டைகளாக உருட்டி பூரி போல் வளர்த்து எண்ணெய்யை காயவைத்து பொறித்து எடுக்கவும்.

குறிப்புகள்: