ப்ரெட் உப்புமா (2)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ப்ரெட் - 1/2 பாக்கெட்

பெரிய வெங்காயம் - 1

தக்காளி - 1

பச்சை மிளகாய் - 3

கடுகு - 1 தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிது

மிளகு தூள் - சிறிது

எண்ணெய் - 1 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் ப்ரெட்டை சிறு துண்டுகளாக செய்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி ப்ரெட்டை சிறிது வறுத்து எடுத்து கொள்ளவும்.

வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

பிறகு அதனுடன் தக்காளி சேர்த்து வதக்கவும். அதனுடன் வறுத்த ப்ரெட் துண்டுகளை சேர்த்து கிளறி விடவும்.

தேவைக்கேற்ப உப்பு போட்டுக் கொள்ளவும். மிளகு தூள் தூவி இறக்கி வைத்து பரிமாறவும்.

குறிப்புகள்: