புளி உப்புமா

on on on on off 4 - Great!
4 நட்சத்திரங்கள் - 4 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

உடைத்த புழுங்கல் அரிசி - 3 3/4 கப்

மிளகாய் வற்றல் - 12

பெருங்காயம் - சின்ன நெல்லிக்காய் அளவு

புளி - பெரிய எலுமிச்சை அளவு

கடலைப்பருப்பு - 1/4 கப்

கடுகு - 1/2 மேசைக்கரண்டி

கறிவேப்பிலை - ஒரு கொத்து

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

எண்ணெய் - 1 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

உப்புமா செய்ய தேவையானவற்றை எடுத்து தயாராக வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு வெடித்ததும் மிளகாய் வற்றல் கிள்ளி போட்டு கடலைப் பருப்பு, பெருங்காயம் போட்டு 4 நொடி வதக்கவும்.

புளியுடன் 7 கப் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து கரைத்து எடுத்துக் கொள்ளவும். அதில் மஞ்சள் தூள் மற்றும் வதக்கியவற்றை சேர்க்கவும்.

அதன் பின்னர் அதில் கறிவேப்பிலை சேர்த்து 10 நிமிடம் மூடி வைத்து கொதிக்க விடவும்.

கொதித்ததும் உடைத்த புழுங்கல் அரிசியை போட்டு கிளறி விடவும்.

நன்கு கிளறி விட்டு மூடி போட்டு 5 நிமிடம் வேக வைக்கவும்.

உப்புமா நன்கு வெந்ததும் இறக்கி வைக்கவும்.

குறிப்புகள்: