பச்சை பட்டாணி தோசை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பட்டாணி - 1 கப்

பயத்தம் பருப்பு - 1 கப்

பச்சை மிளகாய் - 3

இஞ்சி துருவியது - 1 தேக்கரண்டி

வெங்காயம் நறுக்கியது - 1 கப்

கொத்தமல்லி நறுக்கியது - 1 கப்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பயத்தம் பருப்பை சுத்தம் செய்து 30 - 40 நிமிடம் வெந்நீரில் ஊற வைக்கவும். பின்பு பருப்பை வடித்து, அதனுடன் பச்சை பட்டாணி, மிளகாய், இஞ்சி சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து அரைத்துக் கொள்ளவும். அரைத்தமா தோசைமா பதத்தில் இருக்க வேண்டும்.

வெங்காயம், கொத்தமல்லி, உப்பை மாவில் கலந்து வைக்கவும்.

பின்பு தோசையாக வார்த்து மொறு மொறுப்பாக சுட்டு எடுக்கவும்.

குறிப்புகள்: