பச்சரிசி இட்லி

on on on on off 2 - Great!
4 நட்சத்திரங்கள் - 2 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 2 கப்

முழு உளுந்து - 2 கப்

அவல் - ஒரு கைப்பிடி

தேவையான அளவு

செய்முறை:

பச்சரிசி, உளுந்து இரண்டையும் தனித்தனியாக ஊறவைக்கவும்.

அவலையும் தனியாக ஊற வைக்கவும்.

ஒரு மணி நேரம் ஊறியதும் முதலில் உளுந்தை (ஊற வைத்த தண்ணீரையும் சேர்த்து) கிரைண்டரில் போட்டு குடையக் குடைய அரைத்து வழித்து எடுத்து வைக்கவும்.

அரிசியைக் கல்போக களைந்து வைக்கவும்.

பிறகு ஊற வைத்த அவலையும், அரிசியையும் கிரைண்டரில் போட்டு நைஸ் ரவை பதத்தில் அரைத்து வழித்து எடுத்து அரைத்த உளுந்துடன் சேர்த்து உப்பு போட்டு கரைத்து மூடி வைக்கவும்.

மாவு நன்கு பொங்கி வந்ததும் 1 தேக்கரண்டி நல்லெண்ணெய் விட்டு நன்கு கலக்கி இட்லி வார்க்கவும்.

குறிப்புகள்: