தக்காளி தோசை (5)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

இட்லி அரிசி - 1 கப்

தக்காளி - 3

சிவப்பு மிளகாய் - 6 (காரத்திக்கேற்ப)

தனியா - 2 மேசைக்கரண்டி

வெங்காயம் - 1

கொத்தமல்லி - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

இட்லி அரிசியைக் கழுவி 4 மணி நேரம் ஊற வைக்கவும்.

வெங்காயம் மற்றும் கொத்தமல்லியை பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

மிக்ஸியில் தனியா, சிவப்பு மிளகாய் மற்றும் தக்காளி சேர்த்து அரைக்கவும்.

அடுத்ததாக ஊறிய இட்லி அரிசியையும் போட்டு அரைத்துக் கொள்ளவும்.

உப்பு, பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி சேர்த்து சிறிது நீர்க்க கரைத்து 10 நிமிடம் அப்படியே வைத்து விட்டு, பின்னர் தோசையாக ஊற்றி எடுக்கவும்.

குறிப்புகள்: