செட் தோசை (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

புழுங்கல் அரிசி - 2 டம்ளர்

பச்சரிசி - 2 டம்ளர்

உளுத்தம் பருப்பு - 1 டம்ளர்

வெள்ளை சோயா - 1 தேக்கரண்டி

கேசரிப் பவுடர் - 1/2 தேக்கரண்டி

ஆப்ப சோடா - 1/4 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

புழுங்கல் அரிசி, பச்சரிசியை ஒன்றாகவும், உளுத்தம் பருப்பு, சோயா ஒன்றாகவும் 2 மணி நேரம் ஊற வைக்கவும்.

பிறகு புழுங்கல் அரிசி, பச்சரிசி, உளுத்தம் பருப்பு, சோயா எல்லாவற்றையும் ஒன்றாக கிரைண்டரில் போட்டு கெட்டியாக அரைக்கவும்.

உப்பு சேர்த்து கரைத்து 8 மணி நேரம் புளிக்க விடவும்.

புளித்த பின் ஊற்றுவதற்கு முன் கேசரிப் பவுடர், ஆப்ப சோடா சேர்த்து கலக்கி ஊத்தப்பம் போல் கனமாக இருபக்கமும் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.

குறிப்புகள்: