சிக் பிரைட் சில்லி பரோட்டா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பரோட்டா - ( சுட்டது) 4

வெங்காயம் - 1

சிக் பீஸ் - 1/2 கப்

இஞ்சி பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி

பச்சை மிளகாய் - 2

மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி

கரம் மசாலாத் தூள் - ஒரு தேக்கரண்டி

கேரட் - 1

பீன்ஸ் - 15

குடை மிளகாய் - 1

பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - 1/4 கப்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பரோட்டா சிறு சிறு துண்டுகளாக வெட்டி கொள்ளவும்

வெங்காயம், கேரட், பீன்ஸ், குடை மிளகாய், பச்சை மிளகாய் நீள வாக்கில் வெட்டி கொள்ளவும்.

ஓரு சட்டியில் இரண்டு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும்.

இதனுடன் பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு போட்டு வதக்கவும்.

பிறகு அதில் நறுக்கிய கேரட், பீன்ஸ், குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.

இதில் மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.

எல்லாம் சிறிது நேரம் வதங்கியதும் சிக் பீஸ், பரோட்டா துண்டுகளை போட்டு,

தேவையான அளவு உப்பு சேர்த்து பிரட்டி விடவும்.

பரிமாறும் பொழுது நறுக்கிய கொத்தமல்லி தூவவும்.

இதற்கு வெங்காயம் பச்சடி மிக ருசியாக இருக்கும்.

குறிப்புகள்: