சலாமி சாண்ட்விச்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ப்ரவுன் ப்ரெட் அல்லது சாண்ட்விச் ப்ரெட் - 10

சிக்கன் சலாமி - 6

சிறிய லெட்டூஸ் - 1

கோஸ் துருவல் - 1 கப்

சுக்கினி - 2

குடைமிளகாய் - 1

செலரி - ஒரு கைப்பிடி அளவு

லீக்ஸ் - 1

வெங்காயத் தாள் - 5

சாண்ட்விச் ஸ்ப்ரெட் (Sandwich Spread) - 3 மேசைக்கரண்டி

எக்லெஸ் மயோனைஸ் - 1 மேசைக்கரண்டி

பீநட் பட்டர் அல்லது சாலட் பட்டர் - 2 மேசைக்கரண்டி

செய்முறை:

லெட்டூஸ், லீக்ஸ், செலரி, குடைமிளகாய், சுக்கினி மற்றும் வெங்காயத் தாள் ஆகியவற்றைப் பொடியாக நறுக்கவும். சலாமியை ஓவனில் மூன்று நிமிடங்கள் வேக வைத்தெடுத்து பொடியான, நீளத் துண்டுகளாக நறுக்கவும். (ஆவியிலும் வேகவைத்து எடுக்கலாம்).

அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து மயோனைஸ் மற்றும் சாண்ட்விச் ஸ்ப்ரெட் போட்டுக் கலக்கவும்.

ஒரு ப்ரெட் ஸ்லைஸை எடுத்து பீநட் / சாலட் பட்டர் தடவவும்.

அதன் மேல் சலாமி கலவையை பரவலாக வைத்து, பட்டர் தடவிய இன்னொரு ப்ரெட் ஸ்லைஸை வைத்து மூடவும்.

அனைத்து ப்ரெட்டையும் இதே போல தயார் செய்து, ஓவனில் 2 நிமிடங்கள் வைத்தெடுக்கவும். (ப்ரெட்டின் இருபுறமும் சூடாகும் வரை தோசைக்கல்லில் வைத்தும் எடுக்கலாம்).

ப்ரெட்டின் ஓரங்களை கத்தியால் நறுக்கிவிட்டு, முக்கோணமாக நறுக்கிப் பரிமாறவும்.

குறிப்புகள்:

சுக்கினிக்கு பதிலாக வெள்ளரிக்காயும் சேர்க்கலாம்.

தக்காளி சேர்த்தும் செய்யலாம். தக்காளி சேர்த்தால் உடனே சாப்பிட வேண்டும். இல்லையெனில் ப்ரெட் ஊறிப் போய்விடும்.