கோதுமை மாவு இனிப்பு தோசை (2)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு - 1 கப்

பாம்பே ரவை - 1/2 கப்

ராகி மாவு - 1/2 கப்

வெல்லம் - 1 கப்

ஏலப்பொடி - 1 தேக்கரண்டி

செய்முறை:

வெல்லத்தை பொடியாக்கி ஒரு பாத்திரத்தில் எடுத்து கொண்டு, ஒரு கப் தண்ணீர் விட்டு கரைத்து பாகாய் காய்ச்சி கொள்ளவும்.

காய்ச்சின வெல்லப் பாகினை வடிகட்டி, ஏலப் பொடி மற்றும் மாவுகளைக் கலந்து கட்டித் தட்டாமல், தோசை மாவு பதத்திற்குக் கரைத்துக் கொள்ளவும்.

சுமார் ஒரு மணி நேரம் கழித்து இதனை தோசையாக சுட்டெடுக்கவும்.

அதிகம் பரத்தாமல், சிறிய அளவு தோசையாக சுடவும். எண்ணெய்யுடன் சிறிது நெய்யும் கலந்து வார்த்தால் மிகவும் சுவையாக இருக்கும்.

குறிப்புகள்:

இதற்கு தொட்டுக் கொள்ள இஞ்சித் தொக்கு பொருத்தமாய் இருக்கும்.