கொத்து பரோட்டா (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பரோட்டா - 5

வெங்காயம் - 2

தக்காளி - 1

பச்சை மிளகாய் - 2

இஞ்சி, பூண்டு விழுது - 1 1/2 தேக்கரண்டி

மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி

சீரக தூள் - 1/2 தேக்கரண்டி

மல்லித் தழை - ஒரு கொத்து

முட்டை - 2

கீமா - 25 கிராம்

எலுமிச்சைசாறு - 1 தேக்கரண்டி

எண்ணெய் - 5 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை துண்டுகளாகவும், பச்சை மிளகாயை பொடியாகவும் நறுக்கிக் கொள்ளவும். கீமாவில் அரை தேக்கரண்டி இஞ்சி, பூண்டு விழுது, கால் தேக்கரண்டி மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.

பரோட்டாவை கைகளால் சிறு சிறு துண்டுகளாக்கி அதை கூரான விளிம்புள்ள டம்ளரால் நன்கு கொத்தி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் போட்டு வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய் தூள் சேர்த்து வதக்கி, தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். தக்காளி வதங்கியதும் மிளகு தூள், சீரக தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

வதங்கியதும் கொத்தி வைத்த பரோட்டாவை சேர்த்து நன்கு பிரட்டி விடவும். அதனுடன் எலுமிச்சைசாறு சேர்த்து கிளறவும்.

முட்டையை கொத்தி ப்ரோட்டா கலவையில் சேர்த்து பிரட்டி விட்டு, வேக வைத்த கீமாவையும் சேர்த்து நன்கு கிளறி விடவும். மல்லிதழை போட்டு 2 நிமிடம் கிளறி விட்டு இறக்கவும்.

சுவையான கொத்து பரோட்டா தயார்.

குறிப்புகள்: