காளிபிளவர் பரோட்டா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு - 2 கப்

துருவிய காளிபிளவர் - 1 சின்ன பூ

பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2

பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1

கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி

மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

தனியா தூள் - 1/2 தேக்கரண்டி

பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை - சிறிது

எண்ணெய் - 1 குழிக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கோதுமை மவை உப்பு கலந்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து வைக்கவும்.

காளிபிளவர், உப்பு, பச்சை மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி, தூள் வகைகள் எல்லாம் சேர்த்து கலக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு, இந்த கலவையை போட்டு நன்றாக வதக்கவும்.

காளிபிளவர் பாதி வதங்கியதும், தண்ணீர் தெளித்து மூடி போட்டு நன்றாக வேக விடவும்.

தண்ணீர் சுத்தமாக வற்றி கலவை திக் ஆனதும் எடுக்கவும்.

வழக்கமாக சப்பாத்தி திரட்டுவது போல் திரட்டி, உள்ளே சிறிது காளிபிளவர் கலவை வைத்து மூடி, மீண்டும் சப்பாத்தி போல் (சற்று கனமாக) தேய்த்து, மேலே நெய் தடவி தோசை கல்லில் சுட்டு எடுக்கவும்.

குறிப்புகள்:

நெய்'க்கு பதிலாக எண்ணெயும் தேய்கலாம்