காஞ்சிபுரம் இட்லி (5)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

இட்லி மாவு - 4 கப்

இஞ்சி - 1 சிறு துண்டு

நல்லெண்ணெய் - 1 தேக்கரண்டி

சோடாமாவு - 1 சிட்டிகை

தாளிக்க:

கடுகு - 1/2 தேக்கரண்டி

உளுந்து - 1 தேக்கரண்டி

கடலை பருப்பு - 1 தேக்கரண்டி

மிளகு - 1 தேக்கரண்டி

சீரகம் - 1 தேக்கரண்டி

தேங்காய் பூ - 2 தேக்கரண்டி

கறிவேப்பிலை- கொஞ்சம்

பெருங்காயம் - 1/2 தேக்கரண்டி

எண்ணெய் - 2 தேக்கரண்டி

உப்பு - தேவைக்கு

செய்முறை:

புளித்த இட்லி மாவுடன் பொடியாக நறுக்கிய இஞ்சி, சோடா மாவு, உப்பு , சுடு செய்த நல்லெண்ணெய் ஊற்றி கலக்கிவைக்கவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் காய வைத்து கடுகு , உளுந்துகடலை பருப்பு தாளித்து பொன்னிறமாக வந்ததும் மிளகு, சீரகம், தேங்காய் பூ, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து வதக்கி மாவுடன் சேர்க்கவும்.

பிறகு இட்லி தட்டில் வேகவைத்தெடுங்கள்.

குறிப்புகள்: