கம்பு இட்லி, தோசை மாவு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கம்பு - 1 கப்

பச்சரிசி - 1 கப்

உளுந்து - ஒரு கைப்பிடி

வெந்தயம் - சிறிது

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

உப்பு தவிர்த்து மற்ற அனைத்து பொருட்களையும் 5 மணி நேரம் ஊற வைக்கவும்.

பின்பு வெட் கிரைண்டேரில் ஊற வைத்தவற்றை போட்டு அரைத்து எடுத்து உப்பு சேர்த்து கரைத்து வைக்கவும்.

புளிக்க வைத்த மாவை மறுநாள் இட்லி தட்டில் ஊற்றி பானையில் வைத்து வேக வைக்கவும்.

நன்கு வேக வைத்து இறக்கவும். சுவையான, எளிதாக செய்யக்கூடிய கம்பு இட்லி ரெடி.

இதே மாவைக் கொண்டு தோசையும் வார்க்கலாம். தோசைக் கல்லில் எண்ணெய் தடவி காய வைத்து முதல் நாள் அரைத்து வைத்த மாவை எடுத்து தோசையாக வார்க்கவும்.

இருபுறம் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

சுவையான கம்பு தோசை தயார்.

குறிப்புகள்: