ஓட்ஸ் ரவா தோசை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ஓட்ஸ் - 1 கப்

அரிசி மாவு - 1/4 கப்

ரவை - 1/2 கப்

தயிர் - 1 கப்

தண்ணீர் - தேவையான அளவு

எண்ணெய் அல்லது வெண்ணெய் - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

ஓட்ஸ் மற்றும் ரவையை குறைந்தது 15 முதல் இருபது நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைக்கவும்

ஊறிய ஓட்ஸ் மற்றும் ரவையை தேவையான அளவு உப்பு இட்டு கையாலேயே பிசைந்துக்கொள்ளவும்.

அரிசி மாவை சிறிது சிறிதாக சேர்த்து கலக்கவும். அத்துடன் தயிரையும் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கொண்டுவரவும்.

அரை மணி நேரம் கழித்து தோசைக் கல்லை மிதமான சூட்டில் வைத்து இந்த மாவை தோசைக்கு ஊற்றுவது போல் நடுவில் ஊற்றாமல் தோசைக் கல்லை சுற்றி ஊத்தி நடுவில் கொண்டு வர வேண்டும்.

மாவும் கொஞ்சம் தண்ணீர் போல் தான் இருக்கும். அதனால் தானாக நடுவில் வந்து கூடிவிடும்.

எண்ணெய் விட்டு பின் திருப்பி போட்டு எடுக்கவும்.

குறிப்புகள்: