ஓட்ஸ் இட்லி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கோதுமை ரவை - 2 கப்

ஓட்ஸ் - 1 கப்

புளித்த தயிர் - 2 கரண்டி

உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

கடுகு - 1/2 தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி

கடலை பருப்பு - 1/2 தேக்கரண்டி

எண்ணெய் - 2 தேக்கரண்டி

பொடி பொடியாக நறுக்கிய இஞ்சி - 1/2 தேக்கரண்டி

பொடி பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 1/2 தேக்கரண்டி

பெருங்காயம் - ஒரு சிட்டிகை

செய்முறை:

ஓட்ஸை மிக்ஸியில் போட்டு நன்கு பொடி செய்து கொள்ளவும்.

ஓட்ஸை இரண்டு கப் கோதுமை ரவையில் போட்டு கலந்து புளித்த தயிராய் சேர்த்து தேவையான அளவுக்கு உப்பு போட்டு, சிறிது தண்ணீரும் ஊற்றி இட்லி மாவு பதத்துக்குக் கரைத்துக் கொள்ள வேண்டும்.

கரைத்த மாவில், தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களை எல்லாம் தாளித்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

பிறகு வழக்கமாக இட்லி செய்யும் முறையில் ஆவியில் வேக வைத்து எடுக்கவும். சுவையான இட்லி தயார்.

குறிப்புகள்: