உருளைக்கிழங்கு பரோட்டா (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு - 1/4 கிலோ

உருளைக்கிழங்கு - 2

பச்சை மிளகாய் - 4

பச்சை பட்டாணி - 50 கிராம்

கொத்தமல்லி - சிறிதளவு

மஞ்சள் பொடி - சிறிதளவு

ஓமம் - சிறிதளவு

காரப்பொடி - 1/2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கிழங்கை வேகவைத்து தோலுரித்து எடுத்துக் கொள்ளவும். பச்சை மிளகாய், கொத்தமல்லி ஆகியவற்றை சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.

பட்டாணியையும் வேக வைத்து எடுத்துக்கொண்டு அத்துடன் மேலே கொடுக்கப்பட்டுள்ளவற்றை சேர்த்து நன்கு பிசையவும்.

பிறகு இந்தக் கலவையை கோதுமை மாவுடன் சேர்த்து தண்ணீர் விடாமல், தேவைப்பட்டால் கொஞ்சமாக விடவும்) நல்ல தளர்ச்சியாக பிசையவும்.

பிசைந்த மாவினை சுமார் அரைமணி நேரம் ஊற விடவும். பிறகு சப்பாத்தியாக செய்து, நெய் தடவி கல்லில் போட்டு எடுக்கவும்.

குறிப்புகள்:

இதனை வெங்காயப் பச்சடியுடன் பரிமாறவும்.

சப்பாத்தியை சற்று தடிமனாக இடவும்.

தண்ணீரை குறைவாக சேர்க்கவும்.