இட்லி உப்புமா (2)

on on on on on 1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

இட்லி - 4

கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு, கறிவேப்பிலை - தாளிக்க

மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

மல்லி தூள் - 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

வெங்காயம் - 1/4

எண்ணெய் - 1 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.

இட்லி'யை சிறிது நேரம் பிரிஜில் வைத்து எடுத்து உதிர்க்கவும் (வெளியே இருந்தால் சில நேரம் உதிர்க்க வராது. துண்டு துண்டாக வெட்டினால் மசாலா நன்றாக ருசி இருக்காது. ஆகவே நன்றாக பெரிய ரவை பதத்துக்கு உதிர்த்து வைக்கவும்).

கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கவும்.

இதில் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.

இத்துடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லி தூள், உப்பு சேர்த்து 1 நிமிடம் சிறுந்தீயில் வதக்கும்.

பின் உதிர்த்த இட்லி சேர்த்து பிரட்டவும்.

இட்லி மசாலாவுடன் நன்றாக கலந்து வதங்கி மசாலா வாசம் போனதும் எடுக்கவும்.

அடிக்கடி கிளர வேண்டும், இல்லை என்றால் அடிபிடித்துவிடும்.

குறிப்புகள்: