இடியாப்பம் சோறு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

இடியாப்பம் (உதிர்த்து வைக்கவும்) - 10

நெய் - தாளிப்புக்கு

கருவா - ஒரு துண்டு

ஏலம் - 3

கிராம்பு - 3

இஞ்சி விழுது- 1 தேக்கரண்டி

பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

தயிர் - 1 தேக்கரண்டி

வெங்காயம் - பாதி

கருவேப்பிலை - சிறிது

ரம்பை இலை - சிறிது

தேங்காய் பால் - 1 கப்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிவைக்கவும்.

ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி கருவா,ஏலம்,கிராம்பு போட்டு தாளித்து,பின் வெங்காயம்,கருவேப்பிலை, ரம்பை இலை போட்டு வதக்கவும்.

பின் இஞ்சி, பூண்டு விழுது, தயிர் சேர்த்து வதக்கி அதில் தேங்காய் பால் ஊற்றி கொதிக்கவிடவும்.

கொதித்ததும் உப்பு சேர்த்து பின் உதிர்த்துவைத்த இடியாப்பத்தை போட்டு கிளறி இறக்கவும் தீயை குறைத்துவைத்து கிளறி பரிமாறவும்.

குறிப்புகள்:

வெங்காய சம்பல் உடன் பரிமாறவும்.