ஆலு ரொட்டி

on on on off off 2 - Good!
3 நட்சத்திரங்கள் - 2 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு - 4 கப்

உருளைகிழங்கு - 4

இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி

சீரகம் - 1 தேக்கரண்டி

கறிமசால் பொடி - 1 மேசைக்கரண்டி

தயிர் – 1/4 கப்

மல்லி இலை - 1 கொத்து

புதினா இலை - 1 கொத்து

எண்ணை - பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

ஓவனில் உருளைகிழங்கை க்யூப் சைஸ் துண்டுகளா நறுக்கி அதனுடன் இஞ்சி பூண்டு விழுது,சீரகம்,கறிமசால்பொடி,மல்லி ,புதினா இலைகள் உப்பு

சேர்த்து சிறிதளவு நீர் தெளித்து மைக்ரோஹையில் நன்றாக வேகும்வரை இடையிடையே கிளறி வைத்து எடுக்கவும்.

ஆறியதும் அதை அப்படியே தயிர் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அடிக்கவும்

அதை கோதுமை மாவில் கலந்து தேவைக்கு உப்பு சேர்த்து பிசையவும் ..

அதன்மேல் எண்ணைய் தடவி ஈரமான துணியில் அரை மணி வரை ஊறவிடவும்..பிறகு வேண்டும் வடிவில் தேய்த்து கட் செய்து தவாவில் எண்ணை தடவி சுடவும்

குறிப்புகள்: