அவல் உப்புமா (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

அவல் - 200 கிராம்

துவையல் அரைக்க:

தேங்காய் - அரை மூடி

பச்சைமிளகாய் - 4

பூண்டு - 3 பல்

புளி - ஒரு எலுமிச்சை அளவு

கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு

உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

கடுகு - ஒரு தேக்கரண்டி

வெங்காய வடகம் (ஒன்றிரண்டாக ஒடித்துக் கொள்ளவும்) - 3

கறிவேப்பிலை - 1 ஆர்க்கு

காய்ந்த மிளகாய் - 2

செய்முறை:

அவலை தண்ணீர் விட்டு அலசி தண்ணீரை வடித்துவிட்டு 10 நிமிடங்கள் வைக்கவும்.அப்போது தான் அவல் நன்றாக ஊறி இருக்கும்.

துவையலுக்கு கொடுத்திருக்கும் பொருட்களை மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

ஊறியிருக்கும் அவலில் துவையலை போட்டு நன்றாக பிசிறி 10 நிமிடம் வைக்கவும்.

வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்து வடகத்தைப் போடவும். (வடகம் இல்லையென்றால் வெங்காயத்தைப் போட்டு வ்தக்கவும்)

வடகம் சிவந்தவுடன் துவையலில் ஊறியிருக்கும் அவலைப் போட்டு சிறிது நேரம் கிளறவும். அவல் சூடானதும் இறக்கவும்.

குறிப்புகள்:

வெங்காய வடகம் இல்லையென்றால் பெரிய வெங்காயம் ஒன்று பொடியாக அரிந்தது + ஒரு தேக்கரண்டி உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்கவும்.