சோயா சாம்பார்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

முளைகட்டிய சோயா - 1/2 கப்

துவரம் பருப்பு - 1/4 கப்

சின்ன வெங்காயம் - 5

பச்சை மிளகாய் - 2

பூண்டு - 3 பல்

தக்காளி - 1

மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி

புளி - தேவைக்கு ஏற்ப

கடலை பருப்பு, உளுந்து, வேர்கடலை, காய்ந்த மிளகாய் - தாளிக்க

எண்ணெய், கடுகு, சீரகம், வெந்தயம், பெருங்காயம், கறிவேப்பிலை - தாளிக்க

ஆல் பர்பஸ் பொடி - 1 தேக்கரண்டி

கொத்தமல்லி - சிறிதளவு

உப்பு - தேவைக்கு ஏற்ப

செய்முறை:

சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி ஆகியவற்றை நறுக்கி வைக்கவும்.

புளியை வேக வைத்த தண்ணீர் ஊற்றி கரைத்து வைக்கவும்.

பருப்புகளை பூண்டு, பெருங்காயம் சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். வதங்கியதும் தக்காளி, பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்

நன்கு வதங்கி எண்ணெய் பிரிந்து வரும்போது புளி கரைசலை ஊற்றவும். நன்றாக கொதிக்கும் போது உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க வைக்கவும்

பின்பு இந்த கலவையை பருப்பில் சேர்க்கவும் ஆல் பர்பஸ் பொடி, கொத்தமல்லி சேர்க்கவும்

வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுத்தவற்றை போட்டு தாளிக்கவும்

தாளித்தவற்றை பருப்பு கலவையில் சேர்த்து கொதிக்க வைக்கவும்

இறக்கும் போதும் சிறிது கொத்தமல்லி சேர்த்து பரிமாறவும்..

குறிப்புகள்: