காய்கறி சாம்பார்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

துவரம் பருப்பு - 150 கிராம்

காய் கறிகள் (காரட், பீன்ஸ், குடமிளகாய், முருங்கக்காய்) - 1 கப் அரிந்தது

சின்ன வெங்காயம் - 10

பெரிய வெங்காயம் - 1 சிறியது

தக்காளி - 2 சிறியது

மாங்காய் - 2 கீற்று

சாம்பார் பொடி - 2 மேசைக்கரண்டி

பெருங்காயம் - 1/2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

பூண்டு - 2 பல்

உப்பு - தேவைக்கு

தாளிக்க:

எண்ணெய் - 5 மேசைக்கரண்டி

கடுகு - 1/2 தேக்கரண்டி

உளுந்து - 1 தேக்கரண்டி

கரிவேப்பிலை - 10 இலைகள்

கொத்தமல்லி இலை - சிறிது

செய்முறை:

பருப்புடன் சின்ன வெங்காயம், ஒரு தக்காளி, பூண்டு, பெருங்காயம், மஞ்சள் தூள் சேர்த்து வேகவைத்து மசித்துக்கொள்ளவும்

காய்கறிகளை தண்ணீர் ஊற்றி 10நிமிடம் மைக்ரோவேவ் அவனில் வேகவைக்கவும்

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி தாளித்து அதில் பெரிய வெங்காயம், தக்காளி, மாங்காய் சேர்த்து நன்கு வதக்கவும், பின் அதனுடன் வேகவைத்த காய்கறியையும் சேர்த்து பிரட்டிவிட்டு சாம்பார்பொடி போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்

இப்போது மசித்த பருப்பையும் உப்பையும் சேர்த்து தேவையான தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்கவிடவும், கடைசியாக மல்லி இலை தூவி பரிமாறவும்

குறிப்புகள்: