வெஜிடபுள் சட்னி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

காரட் - 1

பீன்ஸ் - 6

கோஸ் - 4 இலை

உருளை - 1

காலிப்ளவர் - 5 பூ

பெரிய வெங்காயம் - 2

பூண்டு - 2 பல்

தக்காளி - 1 சிறியது

புளி - சிறிதளவு

உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி

காய்ந்த மிளகாய் - 3

தாளிப்பதற்கு:

கடுகு - 1 தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிதளவு

பெருங்காயம் - சிறிதளவு

எண்ணெய் - 1 மேசைக்கரண்டி

செய்முறை:

கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி உளுத்தம்பருப்பு பொரிய விடவும்.

பின்னர் காய்ந்த மிளகாய்,வெங்காயம்,பூண்டு போட்டு வதக்கவும்.

பின் காய்கறிகள் அனைத்தையும் போட்டு வதக்கி, தக்காளி, புளி,உப்பு போட்டு நன்றாக வதக்கவும்.

ஆறியப்பின் மிக்ஸியில் போட்டு அரைத்து எடுக்கவும்.

தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை பயன்படுத்தி தாளிக்கவும்.

சுவைமிக்க சட்னி தயார்.

குறிப்புகள்: