ராமேஸ்வரம் சட்னி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி

கடலைப்பருப்பு - 2 தேக்கரண்டி

வரமிளகாய் - 4

புளி - ஒரு நெல்லிக்காய் அளவு

தேங்காய் - ஒரு மூடி

பெருங்காயம் - கால் தேக்கரண்டி

கடுகு - ஒரு தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி

கறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவு

செய்முறை:

ஒரு வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, வரமிளகாய் போட்டு வறுக்கவும்.

பருப்பு வகைகள் சிவந்ததும் துருவிய தேங்காயை போட்டு வறுக்கவும். இதை உப்பு சேர்த்து அரைக்கவும்.

ஒரு வாணலியில் 4 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளிக்கவும்.

அரைத்த சட்னியை வாணலியில் போட்டு நன்றாக வதக்கவும். கெட்டியானதும் இறக்கவும்.

குறிப்புகள்: