புளி மிளகாய்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

புளி - எலுமிச்சை அளவு

சின்ன வெங்காயம் - 5

பொடி பச்சை மிளகாய் - 15

பெருங்காயம் - 1 சிட்டிகை

நல்ல எண்ணை - 2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்

புளியை ஒரு கப் தண்ணீரில் கரைக்கவும்

பச்சை மிளக்காயை கீறி வைக்கவும்.

வாணலியில் எண்ணை விட்டு கடுகு உளுந்து தாளித்து,பெருங்காயம் 1 சிட்டிகை சேர்த்து, சின்ன வெங்காயத்தை வதக்கவும்

பின்னர் பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும்

பச்சை வாடை போனதும்,புளி கரைசலை சேர்க்கவும்

நன்கு கொதித்ததும் அடுப்பை சிம்மில் வைக்கவும்

நன்கு கெட்டியாக வந்ததும் உப்பு சேர்த்து அடுப்பில் இருந்து இறக்கவும்

குறிப்புகள்:

இட்லி தோசைக்கு தொட்டு கொள்ள நன்றாக இருக்கும்