புதினா தேங்காய் சட்னி

on on on on off 1 - Great!
4 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

புதினா – 1 கட்டு

கொத்தமல்லி – 1/4 கட்டு

எண்ணெய் – 1/2 தேக்கரண்டி

பச்சை மிளகாய் - 3

தேங்காய் – 1/4 முடி

இஞ்சி – சிறிய துண்டு

உப்பு – தேவையான அளவு

தாளிக்க:

கருவேப்பில்லை – 5 இலை

உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி

கடுகு – 1/2 தேக்கரண்டி

பெருங்காயம் – 1/4 தேக்கரண்டி

எண்ணெய் – 1 தேக்கரண்டி

செய்முறை:

முதலில் கொத்தமல்லி மற்றும் புதினாவினை சுத்தம் செய்து கொள்ளவும்.

புதினா மற்றும் கொத்தமல்லியை ½ தே.கரண்டி எண்ணெய் ஊற்றி கடாயில் போட்டு வதக்கி கொள்ளவும்.

பின்னர் வதக்கிய புதினா, கொத்தமல்லியுடன் தேங்காய், பச்சை மிளகாய் ,இஞ்சி மற்றும் உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.

தாளிப்பு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளித்து பின் ஊளுத்தம் பருப்பு, பெருங்காயம் மற்றும் கருவேப்பில்லை போட்டு தாளித்து அரைத்து வைத்துள்ள சட்னியில் சேர்த்து கலக்கவும்.

இப்பொழுது சுவையான புதினா தேங்காய் சட்னி ரெடி.

குறிப்புகள்: