பாம்பே சட்னி (1)

on on off off off 1 - Ok!
2 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

வெங்காயம் - 1

தக்காளி - 1

பச்சை மிளகாய் - 5

பூண்டு - 10 பல்

கடலை மாவு - 3 மேசைக்கரண்டி

கடுகு - 1/4 மேசைக்கரண்டி

கடலைப்பருப்பு - 1/2 மேசைக்கரண்டி

உளுத்தம் பருப்பு - 1/2 மேசைக்கரண்டி

கறிவேப்பிலை - ஒரு கொத்து

எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வெங்காயத்தையும் தக்காளியையும் பொடியாக நறுக்க வேண்டும். கடலைமாவை தண்ணீர் ஊற்றி நன்கு கரைத்து வைக்கவும்.

எண்ணெய் சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு பொரிய விடவும்.

பின்பு உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்து சிவக்க வறுக்கவும்.

வெங்காயம் பூண்டு சேர்த்து சிவக்க வதக்கிய பின் தக்காளி சேர்த்து நன்கு குழையும் வரை வதக்கவும்.

பிறகு கரைத்து வைத்துள்ள கலவையை ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.

நன்கு கொதித்து சிறிது கெட்டியானதும் இறக்கவும்.

குறிப்புகள்:

சப்பாத்தியுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.