தக்காளி சட்னி (3)

on on off off off 1 - Ok!
2 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

பழுத்த தக்காளி - 2

சின்ன வெங்காயம் - 8

பூண்டு - 4

பச்சை மிளகாய் - 3 அல்லது 4

உளுந்தம் பருப்பு - 1 தேக்கரண்டி

கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி

கறிவேப்பிலை - ஒரு கொத்து

உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

கடுகு - 1/2 தேக்கரண்டி

எண்ணெய் - 2 தேக்கரண்டி

செய்முறை:

சின்ன வெங்காயம், பூண்டு, தக்காளி, பச்சை மிளகாய் எல்லாம் பொடியாக நறுக்கி கொள்ளவும்.

வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு, சின்னவெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், தக்காளி, கறிவேப்பிலை, உப்பு போட்டு வதக்கவும்.

வதக்கியவை ஆறியவுடன் மிக்ஸியில் அரைத்தெடுக்கவும்.

பின்பு தாளிப்பு கரண்டியில் எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை தாளித்து அரைத்ததில் கொட்டவும்.

சுவையான தக்காளி சட்னி ரெடி.

குறிப்புகள்:

சூடான இட்லி, தோசையுடன் பரிமாறலாம்.