கேரட் சட்னி (2)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கேரட் - 3

மிளகாய் வற்றல் - 8

தேங்காய்துருவல் - 1 மேசைக்கரண்டி

புளி - சிறிய உருண்டை

கடுகு - 1/2 தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி

பெருங்காயத்தூள் - சிறிதளவு

கறிவேப்பிலை - சிறிதளவு

எண்ணெய் - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கேரட்டை தோல் சீவி வட்டமாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு மிளகாய் வற்றலை போட்டு லேசாக வறுத்து தனியே வைக்கவும்.

பின் நறுக்கிய கேரட் துண்டுகளை போட்டு நிறம் மாறும் வரை வதக்கவும். நன்கு ஆறிய பின் மிளகாய்வற்றல், வதக்கிய கேரட், உப்பு, புளி, துருவிய தேங்காய் சிறிது தண்ணீர் விட்டு அரைக்கவும்.

பின் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து சட்னியில் கலக்கவும்.

குறிப்புகள்: