குண்டு மிளகாய் சட்னி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

குண்டு மிளகாய் - 10

பூண்டு - 8 (அல்லது) 10 பல்

சின்ன வெங்காயம் - 8

புளி - சிறிய நெல்லிக்காய் அளவு

எண்ணெய் - 3 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும். பூண்டு, சின்ன வெங்காயம் மற்றும் குண்டு மிளகாயை நறுக்கி வைக்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி பூண்டு மற்றும் சின்ன வெங்காயம் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.

அதனுடன் உப்பு மற்றும் புளி சேர்த்து பிரட்டவும்.

பிறகு குண்டு மிளகாயைச் சேர்த்து 3 நிமிடங்கள் வதக்கி ஆறவிடவும்.

ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்து எடுக்கவும்.

சுவையான, காரம் அதிகமில்லாத குண்டு மிளகாய் சட்னி ரெடி.

குறிப்புகள்:

இட்லி மற்றும் தோசைக்குப் பொருத்தமாக இருக்கும்.