கத்தரிக்காய் சட்னி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கத்தரிக்காய் - 2

பெரிய வெங்காயம் - 1

தக்காளி - 2

பச்சை மிளகாய் - 2

மஞ்சள் தூள் - சிறிது

மிளகாய் தூள் - 1/4 தேக்கரண்டி

மல்லித் தூள் - 1/4 தேக்கரண்டி

கடுகு - 1/4 தேக்கரண்டி

மல்லித் தழை - சிறிது

எண்ணெய் - தாளிக்க

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கத்தரிக்காய், தக்காளியை பெரியதாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும். மிளகாயை கீறி வைக்கவும்.

குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

அதில் கத்தரிக்காய், தக்காளி சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்.

நிறம் மாறியதும் தூள் வகைகள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கி 2 தம்ளர் தண்ணீர் ஊற்றி 2 விசில் வரை வைக்கவும்.

குக்கரை திறந்து தண்ணீரை வடித்துவிட்டு கத்தரிக்காயை நன்கு மசித்துவிட்டு வடித்த தண்ணீரை சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும். மல்லித் தழை தூவி பரிமாறவும்.

குறிப்புகள்:

இட்லி, சப்பாத்திக்கு இந்த சட்னி நன்றாக இருக்கும்