கடலைமாவு சட்னி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கடலை மாவு - 1 கப்

தேங்காய் நறுக்கியது - 1 தேக்கரண்டி

மல்லி இலை - ஒரு கைப்பிடி

தாளிப்பதற்கு:

கடுகு

உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி.

பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கியது) - 1

இஞ்சி - 1 சிறிய துண்டு துருவியது.

பெருங்காயம் - சிறிது

மிளகாய்வற்றல் - 1 அல்லது 1

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கடலை மாவினை நீர் மோர் பதத்திற்கு கரைத்துக் கொள்ள வேண்டும்.

கலந்த மாவில் உப்பு, தேங்காய் போட்டு கலந்து கொள்ள வேண்டும்.

தாளிக்க கொடுத்துள்ளவற்றை சிறிது எண்ணெயில் தாளித்து கலந்து வைத்துள்ள மாவுக் கலவையை கொட்டி கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.

ஒரு நிமிடத்தில் வெந்துவிடும்.

அடுப்பை அணைத்து விட்டு மல்லி இலை தூவி அலங்கரிக்கவும்.

குறிப்புகள்: