உளுத்தம் பருப்பு சட்னி (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

உளுத்தம் பருப்பு - 1/2 கப்

சிவப்பு மிளகாய் வத்தல் - 5

புளி - 1/2 கோலி அளவு

தேங்காய் துருவல் - 5 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

கடுகு - 1 தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு - சிறிதளவு

சிறிய வெங்காயம் (பொடிதாக நறுக்கியது) - 1 கப்

செய்முறை:

வாணலியில் 1 தேக்கரண்டி எண்ணைய் ஊற்றி உளுத்தம் பருப்பை போட்டு 2 நிமிடம் வறுக்கவும்.

பின் புளி,வத்தல்,தேங்காய் சேர்த்து மீண்டும் வறுக்கவும்.

மிளகாயின் வாசம் வந்தவுடன் நிறுத்தி சூடு ஆறிய பின் கலவையை அரைக்கவும்.

பின் வாணலியில் 4 தேக்கரண்டி எண்ணைய் ஊற்றி கடுகு,உளுத்தம்பருப்பு ,கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் போட்டு 2 நிமிடம் வதக்கவும்.

பின் அரைத்த கலவையை ஊற்றி (நிரைய தண்ணீர் ஊற்றலாம்) உப்பு போடவும்.

நன்கு கலக்கி 5 நிமிடம் கொதிக்கவிடவும்.

சுவையான சட்னி ரெடி.

குறிப்புகள்: