வெஜிடபிள் பிரியாணி குருமா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

உருளை கிழங்கு - 150 கிராம்

காரட் - 150 கிராம்

பீட்ருட் - 150 கிராம்

பீன்ஸ் - 150 கிராம்

பச்சை பட்டாணி - 150 கிராம்

முட்டைக்கோஸ் - 150 கிராம்

பச்சை மிளகாய் - 10

வெங்காயம் - 150 கிராம்

பூண்டு - 20 பல்

தேங்காய் - ஒன்று

நெய் - சிறிது

பட்டை - சிறிது

சோம்பு - சிறிது

ஏலக்காய் - சிறிது

கிராம்பு - சிறிது

கசகசா - சிறிது

உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

காய்கறிகளை நன்கு சுத்தம் செய்து கழுவி சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

பச்சைப் பட்டாணியை உரித்து தனியே எடுத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி காய்கறிகளையும் பட்டாணியையும் போட்டு உப்பு சேர்த்து நன்றாக வேகவைக்கவும்.

உருளைக்கிழங்கு நன்கு வெந்ததும் எடுத்துத் தோல் நீக்கி மீண்டும் பாத்திரத்தில் போட்டு விடவும்.

வெந்தவுடன் தண்ணீரை வடித்து விட்டு வேறொரு பாத்திரத்தில் காய்கறிகளை எடுத்துக் கொள்ளவும்.

தேங்காயை துருவி அரைத்து பிழிந்து கெட்டியானப் பால் எடுத்துக் கொள்ளவும்.

மிக்ஸியில் பட்டை, சோம்பு, ஏலக்காய், கிராம்பு, கசகசா, பச்சைமிளகாய், பூண்டு ஆகியவற்றை போட்டு அரைத்துக் கொள்ளவும்.

தேங்காய் பால் மற்றும் அரைத்தவற்றை காய்கறியுடன் சேர்த்துக் கிளறி விடவும்.

வாணலியில் சிறிது நெய் ஊற்றிக் கடுகைப் போட்டுத் தாளித்து குருமாவுடன் போடவும்.

எல்லாம் சேர்ந்து நன்றாகக் கொதித்ததும் இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: