பன்னீர் குருமா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பொரி கடலை மாவு - 1 தேக்கரண்டி

உருளைக்கிழங்கு - 100 கிராம்

பால் - ஒரு லிட்டர்

எலுமிச்சம் பழம் - 1

தயிர் - 1 கப்

மிளகாய் பொடி - 6 அல்லது 8

கரம் மசாலா பொடி - 1 தேக்கரண்டி

மஞ்சள் பொடி - 1 தேக்கரண்டி

பூண்டு - 6

மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

கசகசா - 2 தேக்கரண்டி

பெரிய வெங்காயம் - 1

மல்லித்தழை - ஒரு கொத்து

தேங்காய் - 1/2 மூடி

செய்முறை:

பன்னீர் செய்வதற்கு:

பாலை பாத்திரத்தில் ஊற்றி கொதிக்கவைத்து நன்கு கொதித்தவுடன் தயிர், எலுமிச்சம் பழச்சாறு சேர்த்துத் திரிக்கவும்.

ஒரு துணியை வைத்து வடிகட்டி கட்டியான பகுதியை எடுத்துக் கொள்ளவும்.

பின் பன்னீரை ஒரு பலகையில் வைத்து அமுக்கி சதுரங்களாக வெட்டவும்.

சதுரங்களை எண்ணெயில் சிவக்க பொரித்து எடுத்து வைக்கவும்.

பன்னீர் குருமா செய்வதற்கு:

தேங்காயை துருவி அரைத்து, பிழிந்து பால் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

பிறகு சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்து இரண்டாம் பால் எடுக்கவும்.

பொரி கடலை மாவுடன் கெட்டியான தேங்காய்ப்பால் சேர்த்துத் தனியாக கரைத்து வைக்கவும்.

வெங்காயத்தையும், தக்காளியையும் பொடியாக நறுக்கி வைக்கவும்.

பட்டை, கிராம்பு, ஏலம் ஆகியவற்றை நெய்யில் வறுத்து மிக்ஸியில் போட்டு தூளாக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு சோம்பு, சீரகம் போட்டுத் தாளித்து அரைத்த மசாலா விழுதை போட்டு நன்கு வதக்கவும்.

அதனுடன் வெங்காயம், தக்காளி சேர்த்து சிவக்க வதக்கவும்.

உருளைக்கிழங்கை சதுரமாக நறுக்கி வாணலியில் போட்டு வதக்கி இரண்டாவது தேங்காய்ப் பாலைக் கலந்து, கரம் மசாலாபொடி, மிளகாய் பொடி இவற்றைச் சேர்த்து உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும்.

வெந்த பிறகு உருளைக்கிழங்குடன் பால், பொரிகடலை கலவையை ஊற்றவும்.

முந்திரிப்பருப்பு, பன்னீர் இரண்டையும் குருமாவில் போட்டு 15 நிமிடம் மிதமான தீயில் வைத்திருக்கவும். இறக்கி வைத்து நறுக்கிய மல்லித்தழை தூவி பரிமாறவும்.

குறிப்புகள்:

உருளைக்கிழங்கிற்குப் பதிலாக பட்டாணியையும் போட்டு குழம்பு தயார் செய்யலாம்.