காலிபிளவர் ஈசி குருமா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

காலிபிளவர் - 1

சின்ன வெங்காயம் - 1/4 கிலோ

தக்காளி - 1

தேங்காய் - 1/2 மூடி

முந்திரி - 10

கசகசா - 1 தேக்கரண்டி

சோம்பு - 1 தேக்கரண்டி

வரமிளகாய் தூள் - காரத்திற்கு ஏற்ப

எண்ணை - 1 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

காலிபிளவரை சிறு சிறு பூக்களாக உதிர்த்து கொதிக்கும் உப்பு தண்ணீரில் போடவும்.

சின்ன வெங்காயத்தை நீள வாக்கில் நைசாக நறுக்கவும். தக்காளியை சுடு தண்ணீரில் போட்டு தோலை உரித்துவிட்டு மிக்ஸியில் அரைத்து வைக்கவும்.

தேங்காய், முந்திரி, கசகசா இவற்றை நைசாக அரைத்து வைக்கவும்.

கடாயில் எண்ணை விட்டு காய்ந்ததும் சோம்பு போட்டு வறுக்கவும். சின்ன வெங்க்காயத்தை சேர்த்து வதக்கி தக்காளி கூழை சேர்த்து 1 டம்ளர் தண்ணீர் விடவும். தண்ணீர் கொதித்ததும் உப்பு தண்ணீரில் போட்டு வைத்த காலிபிளவரை கழுவி சேர்க்கவும்.

உப்பு, வரமிளகாய் தூள் சேர்த்து பூ வெந்த்ததும் அரைத்து வைத்த தேங்காய் சேர்த்து கொதிக்க வைத்து கெட்டியாக வரும் வரை கிளறி விடவும்.

அடுப்பிலிருந்து இறக்கி பரிமாறவும்

குறிப்புகள்:

சப்பாத்தி, பரோட்டா, தோசை, இவைகளுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

சாததிலும் பிசைந்து சாப்பிடலாம்.