வெஜிடபுள் பக்கோடா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கடலை மாவு - 2 கப்

அரிசி மாவு - 3/4 கப்

கேரட் - 2

முட்டைக்கோஸ் - 1 கப்

உருளைக்கிழங்கு - 1 கப்

பெரிய வெங்காயம் - 2

கறிவேப்பிலை - 4 இணுக்கு

இஞ்சி - சிறு துண்டு

மிளகாய் தூள் - 2 மேசைக்கரண்டி (அல்லது) 4 பச்சை மிளகாய்

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மற்ற காய்கறிகளை நீளவாக்கில் மிக மெல்லிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

ஒரு வாயகன்ற பாத்திரத்தில் கடலை மாவையும், அரிசி மாவையும் போட்டு, அதனுடன் வெங்காயம், இஞ்சி, கறிவேப்பிலை, காய்கறிகள், மிளகாய் தூள் (அ) பச்சை மிளகாய் மற்றும் உப்புப் போட்டு நன்றாக பிசறி 5 நிமிடங்கள் மூடிவைக்கவும். (தண்ணீர் ஊற்றத் தேவையில்லை). மீண்டும் ஒரு முறை பிசறினால் காய்கறிகள் மற்றும் வெங்காயத்தில் உள்ள தண்ணீர் மாவுடன் நன்றாகச் சேர்ந்திருக்கும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கலந்து வைத்துள்ள மாவை உதிர்த்துப் போட்டு பொரித்தெடுக்கவும்.

குறிப்புகள்: