வெங்காய வடை (1)

on on on on off 3 - Great!
4 நட்சத்திரங்கள் - 3 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

வெங்காயம் (நீளமாக நறுக்கியது) - 3 என்னம்

கடலை மாவு - 1 கப்

அரிசிமாவு - 1/2 கப்

பச்சை மிளகாய் (நீளமாக கீறியது) - 3

சோடாமாவு - 2 சிட்டிகை

சிவப்புமிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை (பொடியாக அரிந்தது) - 1 இனுக்கு

மிளகு - 1/2 தேக்கரண்டி

எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

மாவுகளை சோடாமாவுடன் சேர்த்து சலித்து வைக்கவும்.

பின் எல்லா பொருட்களையும் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து தண்ணீர் தெளித்து தெளித்து பிசையவும்.

வாணலியில் எண்ணைய் ஊற்றி காய்ந்ததும் இந்த வெங்காய வடைக்கு பிசைந்த மாவை கிள்ளி கிள்ளி போட்டு வடையாக சுட்டு எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: