ரிப்பன் பக்கோடா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பச்சரிசி மாவு - 2 டம்ளர்

கடலை மாவு - 2 டம்ளர்

பொட்டுக்கடலை - 1 டம்ளர்

மிளகாய்ப் பொடி - 2 1/2 தேக்கரண்டி

மஞ்சள் பொடி - 1/4 தேக்கரண்டி

பொடி உப்பு (டேபிள் சால்ட்) - 1 1/4 தேக்கரண்டி

ரீஃபைண்ட் எண்ணெய் - ஒரு லிட்டர்

செய்முறை:

பச்சரிசி மாவு, கடலை மாவு, பொட்டுக்கடலை முதலியவற்றை தயாராக எடுத்துக் கொள்ளவும்.

பொட்டுக்கடலையை மிக்ஸியில் போட்டு மாவாகத் திரித்து எடுத்துக் கொள்ளவும்.

ஒரு வாயகன்ற பாத்திரத்தில் பச்சரிசி மாவு, கடலை மாவு, பொட்டுக்கடலை மாவு, மிளகாய் பொடி, உப்பு, மஞ்சள் பொடி எல்லாவற்றையும் போடவும்.

எல்லாவற்றையும் நன்கு கலந்து, தண்ணீர் ஊற்றி பிசைந்துக் கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய வைக்கவும். உரலில் ரிப்பன் பக்கோடா அச்சைப் போட்டு, அதனுள் மாவை வைத்து காய்ந்த எண்ணெயில் பிழியவும்.

குறிப்புகள்:

சூடான எண்ணெயில், நேராக உரலை வைத்துப் பிழியும்போது, கைகளில் ஆவி அடிக்கும். அதனால், மாவு பிழியும் போது, அடுப்புத் தீயை, தணித்துக் கொள்ளவும். கையை சற்று உயரத்தில் வைத்து, உரலை கவனமாகப் பிடித்துக் கொண்டு, பிழியவும். மாவைப் பிழிந்த பிறகு, தீயை உயர்த்திக் கொள்ளலாம்.