முந்திரி பருப்பு பக்கோடா

on on on on on 1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

முந்திரி பருப்பு (முழு பருப்பு) - 25

வத்தல் - 4

பெருங்காயம் - ஒரு சிட்டிகை

அரிசிமாவு - 2 மேசைக்கரண்டி

கடலை மாவு - 1 கப்

நெய் - 3 மேசைக்கரண்டி

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் முந்திரிபருப்பை நெய்யில் வறுத்து உப்புத்தூள் தூவி தனியாக வைக்கவும்.

பின் வத்தல், சிறிது உப்பு, பெருங்காயம் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.

ஒரு அகன்ற பாத்திரத்தில் அரிசி மாவு,கடலை மாவு,3 மேசைக்கரண்டி நெய், அரைத்த மசாலா,சிறிது உப்பு போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு பிசைந்துக்கொள்ளவும்.

பின்பு எண்ணெயை சூடாக்கி ஒவ்வொரு முந்திரியாக மாவில் முக்கி பொறித்து எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: